

பிரபல திரைப்பட ஜாம்பவான் வால்ட் டிஸ்னியின் பழைய வீடு ஒன்று 7.4 கோடி அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.444 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் கரோல்வுட் எஸ்டேட் என்கிற இடத்தில் வால்ட் டிஸ்னியின் வீடு உள்ளது. இதை ‘ஹூஸ்டன் டைனமோ கால்பந்து அணி 'யின் இணை உரிமையாளர் கேப்ரியல் ப்ரெனெர் என்பவர் கடந்த 1997-ம் ஆண்டு, டிஸ்னி அறக்கட்டளையிடமிருந்து 84.5 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.50 கோடியே 70 லட்சம்) வாங்கினார்.
இந்த வீட்டை 9.0 கோடி அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ. 540 கோடி) விற்பனை செய்வதாக இருந்தது. ஆனால் அதைவிட குறைந்த விலைக்கே இது விற்பனையானது.
சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த வீட்டில் தற்போது 8 படுக்கையறைகள், 17 குளியலறை கள் இருக்கின்றன. நீச்சல்குளம், டென்னிஸ் அரங்கம், நூலகம், உடற்பயிற்சிக் கூடம், திரையரங் கம் உள்ளிட்டவையும் உள்ளன.
இன்று இந்த வீட்டில் டிஸ்னி பயன்படுத்தி பொருட்கள் எதுவுமே இல்லை. வால்ட் டிஸ்னியின் மனைவி லில்லியன் டிஸ்னியால் நடப்பட்ட ரோஜா செடிகள் மற்றும் டிஸ்னி உருவாக்கிய ‘கரோல்வுட் பசிபிக் ரெயில்ரோடு’ எனும் ரயில் செல்வதற்கான சுரங்கப்பாதை மற்றும் புகழ்பெற்ற டிஸ்னி நுழைவுவாயில் ஆகியவை உள்ளன.