

இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்தான், இந்திய ட்விட்டர் வரலாற்றில் ட்விட்டர் பெற்ற பிரம் மாண்ட வளர்ச்சியாகும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான ட்விட்டர் மார்க்கெட்டிங் இயக்கு நர் ரிஷி ஜெட்லி கூறியதாவது:
கடந்த 2013-ம் ஆண்டு முழுக்க 2.5 கோடி ட்விட்கள் தேர்தல், அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகம் பற்றிப் பகிரப்பட்டிருந்தன. நடப்பாண்டு மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற கடந்த மே 16-ம் தேதி வரை 5.8 கோடி ட்விட்கள் பகிரப்பட்டிருந்தன. உலகிலேயே இந்தியாதான் மிக வேகமாக வளரும் ட்விட்டர் சந்தை.
ட்விட்டர் என்றால் என்ன என்பதை முழுவதுமாகப் புரிந்து கொண்ட தலைவர் நரேந்திர மோடி. தேர்தலின் போது, உடனுக்குடன் தகவல்களைப் பகிரும் தளமாக ட்விட்டர் விளங்கியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.