

லிபியாவில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் கேரள நர்ஸ், அவரது ஒன்றரை வயது மகன் உயிரிழந் தனர்.
கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் விபின் குமார். இவரது மனைவி சுனு (29). இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் மகன் இருந்தான். கடந்த 2012-ம் ஆண்டு முதல் இவர்கள் லிபியா வின் சபர்தா நகரில் வசித்து வந்தனர். அங்குள்ள மருத்துவமனையில் சுனு நர்ஸாக பணியாற்றி வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு விபின்குமார் வெளியில் சென்றிருந் தார். வீட்டில் சுனுவும் குழந்தையும் இருந்தனர். அப்போது அவர்கள் வசித்த பகுதியை ஏவுகணை தாக்கியது. இதில் சுனுவும் குழந்தையும் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு லிபியா வில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டில் லிபியாவில் கடாபி ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு உள் நாட்டுப் போர் நீடித்து வருகிறது.