பாக். மண்ணிலிருந்து தீவிரவாதத்தை அறவே ஒழிப்போம்: தேசிய தினத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் உறுதி

பாக். மண்ணிலிருந்து தீவிரவாதத்தை அறவே ஒழிப்போம்: தேசிய தினத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் உறுதி
Updated on
1 min read

பாகிஸ்தான் முன்னெப்போதும் இல் லாத வகையில் தீவிரவாத அச் சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. இம்மண்ணிலிருந்து தீவிரவாதம், பயங்கரவாதத்தை முற்றிலும் அழித் தொழிப்போம் என அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித் துள்ளார்.

கடந்த 1940-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி அகில இந்திய முஸ்லிம் லீக் ‘லாகூர் தீர்மான’த்தை நிறை வேற்றியது. அதுதான் முதல் முதலாக முஸ்லிம்களுக்கு தனிநாடு கோரிக்கை வலியுறுத்தப்பட்ட தீர் மானம். ஆரம்பத்தில் பாகிஸ்தான் என்ற வார்த்தை இத்தீர்மானத்தில் இல்லையெனினும் பின்னாளில் இது பாகிஸ்தான் தீர்மானம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

இந்த நாளை தேசிய தினமாக பாகிஸ்தான் கொண்டாடி வருகிறது. 76-வது பாகிஸ்தான் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. தேசிய தினத்தை முன்னிட்டு, தலைநகர் இஸ்லாமாபாத்தில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

தேசிய தினத்தையொட்டி பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

தீவிரவாதம், பயங்கரவாதம் வடிவில் நாம் முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தலைச் சந்தித் துள்ளோம். ஆனால், இந்த தீயசக்தி களை வெற்றிகொள்ளும் மன உறுதி நமக்கு உள்ளது. தீவிரவாதமும் பயங்கரவாதமும் நமது மண்ணில் இருந்து அறவே துடைத்தெறியப் படும். இம்மண்ணில் உள்ள ஒவ் வொரு பாகிஸ்தானியரும் சமமான வரே. இச்சமூகத்தில் விளிம்புநிலை யில் உள்ளவர்களையும் மைய நீரோட்டத்தில் இணைப்பதே நமது பெருவிருப்பம்.

ஆணும் பெண்ணும் இணைந்து செயலாற்றி நாட்டின் வளர்ச்சியை யும் வளத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் சரிசமமான வாய்ப்பு வழங்கி கூட்டுசமுதாயம் அமைவதற்கு அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தை எவ்வித அச்சமும், அச் சுறுத்தலும் இல்லாமல் பின்பற்றும் நாடாக பாகிஸ்தான் இருக்க வேண் டும். முகமது அலி ஜின்னா கனவு கண்ட கூட்டுச் சமுதாயம், சமத் துவம், நீதி நிறைந்த பாகிஸ்தானை நமது கூட்டுமுயற்சி உருவாக்கும் என்பதில் நான் நம்பிக்கை உடையவனாக இருக்கிறேன்.இவ் வாறு நவாஸ் ஷெரீப் தெரிவித் துள்ளார்.

மோடி, பிரணாப் வாழ்த்து

பாகிஸ்தான் தேசிய தினத்தை யொட்டி பிரதமர் மோடி அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித் துள்ளார்.

“தேசிய தினத்துக்காக பாகிஸ் தான் மக்களுக்கு வாழ்த்துகள்” என ட்விட்டரில் மோடி தெரிவித் துள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். “பாகிஸ் தானுடன் தொடர்ந்து இணக்கமான உறவைப் பேண இந்தியா விரும்பு கிறது. இது இப்பகுதியில் வளர்ச்சி யையும், வளத்தையும் முன்னெடுத் துச் செல்லும் என உறுதியாகக் கூறு கிறேன். பாகிஸ்தான் தேசிய தின கொண்டாட்டத்துக்கு எனது வாழ்த் துகள்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in