Published : 17 Jun 2014 10:00 AM
Last Updated : 17 Jun 2014 10:00 AM

சீனாவில் 3 பேருக்கு தூக்கு

கடந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி தியானன்மென் சதுக்கத்தில் நடந்த கார் வெடிகுண்டு தாக்கு தலில் காரில் இருந்த மூவர் உள்பட 5 பேர் இறந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலில் தொடர்பு டைய 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியின் உரும்கி நகர நீதிமன்றத்தில் தொடங்கியது. இதில் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. தாக்குதலுக்கு நிதி அளித்ததாக 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் 5 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதில் ஒருவருக்கு ஆயுள் சிறையும் 4 பேருக்கு 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x