தீவிரவாதிகள் பதுங்கி உள்ள பகுதியில் பாக் ராணுவம் தாக்குதலில் 21 தீவிரவாதிகள் பலி

தீவிரவாதிகள் பதுங்கி உள்ள பகுதியில் பாக் ராணுவம் தாக்குதலில் 21 தீவிரவாதிகள் பலி
Updated on
1 min read

தலிபான், அல்-காய்தா அமைப்பினர் பதுங்கி உள்ள பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் 21 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்.

இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் ஆசிம் பஜ்வா ட்விட்டரில், “வடக்கு வசிரிஸ்தான் மாவட்டம் ஷவல் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ள பகுதிகளை குறிவைத்து வான் வழியாகவும், தரை வழியாகவும் திங்கள்கிழமை இரவு ராணுவம் தாக்குதலை தொடங்கியது.

இந்தத் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் இதுவரை 21 தீவிரவாதிகள் கொல்லப் பட்டுள்ளனர்” என பதி விட்டுள்ளார்.

பின்னர் அப்பகுதியில் ஒரு கட்டிடம் தீப்பிடித்து எரிவது போன்ற புகைப்படங்களையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். எனினும், பத்திரிகையாளர்களுக்கு அப்பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாரேனும் பலியானார்களா என்ற விவரம் தெரியவில்லை.

ஆப்கன் எல்லையை ஒட்டி உள்ள வசிரிஸ்தான் மலைப் பகுதி, தலிபான் மற்றும் அல்-காய்தா தீவிர வாதிகளின் புகலிடமாக உள்ளது.

இதையடுத்து, தீவிரவாதி களை ஒழித்துக்கட்டுவதற்காக, இந்தப் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 3,750 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட தாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த விவகாரத் தில் பாகிஸ்தான் வெளிப் படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in