

தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என நாட்டு மக்களுக்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
நாம் கடினமான காலத்தை எதிர்நோக்கியுள்ளோம். அதை நினைத்து நான் மிகுந்த கவலை கொள்கிறேன். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுகிறேன். தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கூட தயவு செய்து மறு பசிரீலனை செய்யுங்கள்.
மாகாணங்களும் மத்திய அரசும் இணைந்து செயல்பட்டால் எந்த விஷயத்தையும் எளிதில் கையாளலாம். இதை நாம் கடந்த காலத்திலும் உணர்த்திருக்கிறோம். அதனால் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் கடந்த 7 நாட்களாக தொற்று எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகமாக உள்ளது.
ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பாவில் பல நாடுகளிலுமே கடந்த சில மாதங்களாகவே தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் என்பதால் பொதுமக்கள் இப்போது கொண்டாட்ட திட்டங்களை வகுத்துள்ளதால் ஊரடங்கு உத்தரவை எப்படி அமல்படுத்துவது என்று அரசாங்கங்கள் ஆலோசித்து வருகிறது.
பல நாடுகள் வயதானவர்களுக்கு பூஸ்டர் டோஸை எடுத்துக் கொள்ளுமாறும் அதிகரித்து வருகிறது.