Published : 10 Nov 2021 07:40 PM
Last Updated : 10 Nov 2021 07:40 PM

நியூசிலாந்து பிரதமரின் பேஸ்புக் லைவில் குறுக்கிட்ட மகள்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்னா பேஸ்புக் லைவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் ஏற்படுத்தியுள்ள தளர்வுகள் குறித்தும் பேசிவந்தார்.

அப்போது திடீரென அவரது மகள் குறுக்கிட்டார். உடனே லைவ் பேச்சில் இருந்து கவனத்தை மாற்றிய பிரதமர், நெவி, இது உனது பெட் டைம் (தூங்கும் நேரம்) அல்லவா. நீ செல்ல. நான் சில விநாடிகளில் வருகிறேன் எனக் கூறி அனுப்பிவைக்கிறார்.

பின்னர் மக்களிடம் பேசிய அவர், இந்த நேரத்தில் நெவி தூங்குவாள் என்பதால் நான் பத்திரமாக, நிம்மதியாக உங்களுடன் பேசலாம் என நினைத்தே. ஆனால் தோற்றுவிட்டேன். இதுபோல் உங்களுக்கும் நேர்ந்திருக்கலாம். நல்ல வேளை இப்போது வீட்டில் எனது தாயார் இருக்கிறார். அவர் எனக்கு உதவுவார். சரி நாம் எங்கிருந்தோம் என்று பேச்சைத் தொடர்கிறார்.

சிறிது நேரத்தில் மீண்டும் குறுக்கிடும் அவரின் மகள், ரொம்ப நேரம் ஆகிவிட்டதே என செல்லக் குரலில் கேட்கிறார். ஆமாம், நிறைய நேரம் ஆகிவிட்டது எனக் கூறிவிட்டு பேஸ்புக் லைவ் மீட்டிங்கை முடித்துக் கொள்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறார்.

https://fb.watch/9byEBFkgK_/

3 மாத கைக்குழந்தையுடன் ஐ.நா.வுக்கு வந்த ஆடர்னா:

ஏற்கெனவே ஐக்கிய நாடுகள் சபைக்கு தன்னுடைய 3 மாத கைக்குழந்தையை அழைத்து வந்ததன் மூலம் புதிய வரலாறு படைத்தார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்னா.

கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 73-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்சன் மண்டேலா அமைதிக் கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக உள்ள ஜெசிந்தா ஆடர்னா, கணவர் க்ளார்க் கேபோர்ட் உடன் அதில் பங்கேற்றார். அப்போதுதான் அவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்திருந்தார். அதனால், ஜெசிந்தா ஆடர்னா தமது 3 மாத கைக்குழந்தையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் கைக்குழந்தையுடன் கலந்து கொண்ட முதல் பிரதமர் என்ற பெருமையை இதன்மூலம் பெற்றார் ஜெசிந்தா ஆடர்னா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x