இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு கரோனாவால் உயிரிழப்பு நேரும் வாய்ப்பு 16 மடங்கு குறைவு: ஆய்வில் தகவல்

இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு கரோனாவால் உயிரிழப்பு நேரும் வாய்ப்பு 16 மடங்கு குறைவு: ஆய்வில் தகவல்
Updated on
1 min read

இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு கரோனாவால் உயிரிழப்பு நேரும் வாய்ப்பு 16 மடங்கு குறைவு என ஆஸ்திரேலியாவின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேரில் தடுப்பூசி இரு தவணையும் செலுத்தியோரில் ஒருவர் மட்டுமே நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழலில் தடுப்பூசி செலுத்தாதோரில் 16 பேர் மோசமான பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்திக்க நேரிடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தற்போது ஃபைஸர், மாடர்னா நிறுவனங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும், தடுப்பூசி செலுத்தியவர்களுடன் ஒப்பிடும்போது செலுத்தாதவர்கள் 20 மடங்கு கரோனாவால் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in