

அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் உயிரிழந்தார்.
பிரஸல்ஸ் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சிரியா, இராக்கில் ஐ.எஸ். தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி கடந்த வெள்ளிக்கிழமை சிரியா பகுதியில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தின.
இதில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் அப்துல் ரஹ்மான் முஸ்தபா அல்-குவாதலி கொல்லப்பட்டார். இவர் ஐ.எஸ். தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரிக்கு அடுத்த நிலையில் 2-வது இடத்தில் இருந்தார் என்று அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே சிரியாவின் புராதன நகரான பல்மைராவின் ஒரு பகுதியை அந்த நாட்டு அதிபர் ஆசாத் படைகள் கைப்பற்றி உள்ளன. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த நகரில் உள்ள வரலாற்று சின்னங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் வைத்து தகர்த்துவிட்டது நினைவுகூரத்தக்கது.