சீன பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.10 லட்சம் கோடி

சீன பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.10 லட்சம் கோடி
Updated on
1 min read

சீன பட்ஜெட்டில் ராணுவத்துக்காக ரூ.10,22,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய ராணுவ பட்ஜெட்டைவிட சுமார் 4 மடங்கு அதிகம் ஆகும்.

சீனாவில் தற்போது பொருளா தார தேக்கநிலை நீடிக்கிறது. இந்நிலையில் தென்சீனக் கடல் பகுதியில் ஏராளமான அமெரிக்க போர்க்கப்பல்கள் கடந்த சில மாதங்களாக ரோந்து சுற்றி வருகின்றன. இந்தப் பிரச்சி னையை கருத்திற் கொண்டு அந்த நாட்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.10,22,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டி ருக்கிறது.

இந்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு சுமார் ரூ.2.8 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியைவிட சுமார் 4 மடங்கு அதிகமாக சீன ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in