

பிரிட்டனில் சீக்கிய அமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய அரசு வட்டாரங்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
கடந்த 1984-ம் ஆண்டில் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ஐஎஸ்ஒய்எப்) உருவாக்கப்பட்டது. பஞ்சாபியர்களுக்கு தனி நாடு கோரி தொடங்கப்பட்ட இந்த அமைப் பின் உறுப்பினர்கள் 1985 ஜூன் 23-ல் ஏர் இந்தியா விமானத்தை குண்டுவைத்து தகர்த்தனர். இதில் 329 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஐஎஸ்ஒய்எப் அமைப்புக்கு தடை விதித்தன.
இந்நிலையில் ஐஎஸ்ஒய்எப் அமைப்புக்கு விதித்திருந்த தடையை பிரிட்டிஷ் அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதுதொடர்பான தீர் மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் லார்டு பேட்ஸ் கூறியபோது, கடந்த காலங்களில் ஐஎஸ்ஒய்எப் அமைப்புக்கு தீவிர வாத செயல்களில் தொடர்பிருந்தது உண்மைதான். ஆனால் இப்போது அந்த அமைப்பு மீது எவ்வித குற்றச் சாட்டும் இல்லை. எனவே தடை நீக் கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பிரிட்டிஷ் அரசின் முடிவை அந்த நாட்டின் சீக்கிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் பாய் அம்ரிக் சிங் கூறியபோது, ஐஎஸ்ஒய்எப் அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட இல்லை. சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி அமைதி வழியில் மட்டுமே போராடி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் அரசின் முடிவு குறித்து இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.