

அமெரிக்காவில் 10 வயதில் பள்ளி இறுதி வகுப்பை முடித்து டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளான் இந்திய வம்சாவளி சிறுவன் தனிஷ்க் ஆப்ரகாம். இதன் மூலம் அமெரிக்காவில் மிகக் குறைந்த வயதில் பள்ளிக் கல்வி முடித்து டிப்ளமோ பெற்றவர் என்ற சாதனையை அச்சிறுவன் படைத்துள்ளான்.
கலிபோர்னியா மாகாணம் சாக்ரமென்டோவைச் சேர்ந்த அந்த சிறுவன் 7 வயதுக்குப் பின் பள்ளிக்கு செல்வில்லை. வீட்டில் இருந்தபடியே படிப்பைத் தொடர்ந் தான். கடந்த மார்ச் மாதம் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வை எழுதி அதில் வெற்றி பெற்றுள்ளான்.
இது தொடர்பாக அச்சிறுவன் கூறுகையில், அரசு நடைமுறை களின்படி 10 வயதிலேயே பள்ளி இறுதித் தேர்வை நான் எழுது வதில் பல பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. இத்தேர்வுக்காக நான் கடுமையாக உழைத்தேன். இப்போது வெற்றி கிடைத்துள்ளது.
அடுத்ததாக சமுதாய கல்லூரியின் செமஸ்டர் தேர்வுகளை எழுத இருக்கிறேன். டாக்டர் அல்லது விஞ்ஞானியாக வேண்டும் என்பது தான் எனது லட்சியம் என்று தெரி வித்துள்ளான்.