

வங்கதேசத்துக்கு சொந்தமான வெளிநாட்டு வங்கிக் கணக்கி லிருந்து இணையதள பரிமாற்றம் மூலம் சுமார் ரூ.670 கோடி திருடு போனதையடுத்து, அந்நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் நேற்று திடீரென பதவி விலகினார்.
இதுகுறித்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஊடக பிரிவு செயலாளர் இசானுல் கரிம் நேற்று கூறும்போது, “வங்கதேச மத்திய வங்கியின் ஆளுநர் அதியுர் ரஹ்மான் (64) பிரதமர் ஹசீனாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, தனது பதவி விலகல் கடிதத்தை ரஹ்மான் பிரதமரிடம் வழங்கினார்” என்றார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பெடரல் ரிசர்வ் பாங்க் ஆப் நியூயார்க் வங்கியில் வங்கதேச அரசுக்கு சொந்தமான கணக்கில் இருந்து சுமார் ரூ.670 கோடி இணையதளம் மூலம் ஊடுருவி திருடப்பட்டதாக தகவல் வெளியானது. இது உறுதிப்படுத்தப் பட்ட நிலையில் ரஹ்மான் பதவி விலகினார்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆளுநராக பொறுப் பேற்ற ரஹ்மான், கிராமப்புறங் களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு வங்கி சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டார்.
ரஹ்மான் பதவி விலகியதை யடுத்து, பசல் கபிரை புதிய ஆளுநராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக வங்கதேச நிதியமைச்சர் ஏஎம்ஏ முஹித் தெரிவித்தார்.