உலகம் முழுவதும் முஸ்லிம் விரோத போக்கு கவலையளிக்கிறது: ஐ.நா. பொதுச்செயலர் வருத்தம்

உலகம் முழுவதும் முஸ்லிம் விரோத போக்கு கவலையளிக்கிறது: ஐ.நா. பொதுச்செயலர் வருத்தம்
Updated on
1 min read

உலகம் முழுவதும் முஸ்லிம் விரோத போக்கு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபை சார்பில் மார்ச் 21-ம் தேதி சர்வதேச இனவாத ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதை யொட்டி நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் பேசியதாவது:

உலகம் முழுவதும் வெறுப் புணர்வு வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக முஸ்லிம் விரோத போக்கு கவலையளிக் கிறது. வலதுசாரி சிந்தனையுள்ள அரசியல் கட்சிகள் இனவாதம், மதவாதத்தை தூண்டி மக்களிடம் வெறுப்பை விதைத்து வருகின் றன. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இதற்கு இப்போதே முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் முஸ்லிம் விரோத போக்கிற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சமம் என்ற மனநிலை உருவாக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in