

பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்ற மாநாடு இன்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நேற்று நிறைவு பெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் இன்றும் நாளையும் பருவநிலை மாற்ற மாநாடு நடைபெறுகறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இதற்காக ரோமில் இருந்து பிரதமர் மோடி பிரிட்டன் புறப்பட்டுச் சென்றார்.
கிளாஸ்கோ நகரில் சென்றடைந்த பிரதமர் மோடி, அங்கு காத்திருந்த இந்தியர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் 120 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், அதனை எதிர்கொள்ள பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை தடுக்க மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி போன்ற மரபுசாரா எரிசக்தித் திட்டங்களை செயல்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னணியில் உள்ளது.
முன்னதாக பருவநிலை மாற்ற மாநாட்டில் ந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பிரேசில், தென்னாப்ரிக்கா, இந்தியா மற்றும் சீனாவின் சார்பில் அறிக்கை அளித்தார்.
அதில், ஓராண்டு காலம் தாமதமாக நடைபெற்றாலும், இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்கனவே, தங்களது நாட்டில் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை செயல்படுத்த தொடங்கிவிட்டதை சுட்டிக்காட்டிய அவர். பாரீஸ் உடன்படிக்கை விதிமுறைப் புத்தகம் இந்த மாநாட்டில் முடிவுக்கு வருவதாக தெரிவித்தார்.