Published : 01 Nov 2021 12:51 PM
Last Updated : 01 Nov 2021 12:51 PM

ஜப்பான் தேர்தலில் ஆளும் கூட்டணி பெரும் வெற்றி

ஜப்பான் தேர்தலில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஜப்பான் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடித்து, பலத்த பாதுகாப்புடன் நடந்த இந்த தேர்தலில் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

வாக்குகள் எண்ணப்பட்டதில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சிக்கு 291 இடங்கள் கிடைத்துள்ளன. லிபரல் ஜனநாயகத்தின் கூட்டணி கட்சி 32 இடங்களில் வென்றுள்ளது. தேர்தல் வெற்றி மூலம் புமியோ கிஷிடா, மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

ஜப்பானின் பிரதமரும் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவருமான புமியோ கிஷிடா, டோக்கியோவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வெற்றியை கொண்டாடினார். வெற்றி குறித்து அவர் கூறியதாவது:

தொற்றுநோயில் இருந்து விரைவில் மீண்டெழுவது, அதற்கு கூடுதல் பட்ஜெட் உள்ளிட்டவை எதிர்கால திட்டங்களாகும். பெரிய கொள்கை சவால்களை எதிர்கொள்கிறேன். எனினும் வலுவான தேர்தல் வெற்றி கைகொடுக்கிறது. பயன்படுத்துவேன் என்று கிஷிடா திங்களன்று கூறினார்.

"இது மிகவும் கடினமான தேர்தல், ஆனால் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். 261 இடங்களை மக்கள் வழங்கியுள்ளார்கள். ஒரு பொறுப்பான கட்சியாக செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜப்பான் தேர்தலில் ஆளும் கூட்டணி கணிசமான வெற்றி பெற பிரதமர் புமியோ கிஷிடா பிரச்சாரம் கைகொடுத்தது.
கிஷிடா முன்னாள் வங்கியாளர். சீனாவை எதிர்த்துப் போராடுவதற்கு அதிக ராணுவச் செலவு செய்ய வேண்டும் எனக் கோரி வருபவர். கரோனா காலத்தில் அரசு மீது பெரும் விமர்சனங்கள் இருந்தநிலையில் இந்த தேர்தல் நடந்ததால் ஆளும் கூட்டணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. எனினும் ஆளும் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x