ஜி 20 மாநாட்டை புறக்கணித்த ரஷ்ய, சீன தலைவர்கள்: ஜோ பைடன் கண்டிப்பு

ஜி 20 மாநாட்டை புறக்கணித்த ரஷ்ய, சீன தலைவர்கள்: ஜோ பைடன் கண்டிப்பு
Updated on
1 min read

ஜி 20 காலநிலை மாநாட்டில் நேரில் கலந்து கொள்ளாதற்கு ரஷ்ய மற்றும் சீன நாட்டுத் தலைவர்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டித்துள்ளார்.

இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஜி 20 மாநாடு நடந்தது. பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐ.நா. சபை, உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எனினும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கவில்லை.

இதனை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டித்துள்ளார். உலகின் முக்கிய பொருளாதார பலம் கொண்ட நாடுகளன் தலைவர்கள் இந்த மாநாட்டில் நேரடியாக பங்கேற்று சுற்றுச்சூழல் தொடர்பான வாக்குறுதிகளை அளித்தாலும், ரஷ்ய மற்றும் சீன நாட்டுத் தலைவர்கள் கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ளாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது என அவர் கூறியுள்ளர். இதுகுறித்து அவர் கூறியதாவது:

உச்சிமாநாட்டின் காலநிலை தொடர்பாக பல நாடுகளின் வாக்குறுதிகள் குறைவானவை என்று சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருதுகின்றன. இதற்கு ரஷ்யாவும் சீனாவும் மாநாட்டில் நேரடியாக பங்கேற்காதது மக்கிய காரணம். இது ஏமாற்றத்தை அளிக்கிறது. ரஷ்யாவும் சீனாவும் அடிப்படையில் காலநிலை மாற்றத்தை கையாள்வதில் எந்த உறுதிப்பாட்டையும் காட்டவில்லை. இது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் நாங்கள் என்ன செய்தோம் என்ற கேள்விக்கு பதில் உள்ளது.

நிலக்கரிக்கான மானியத்தை முடிவுக்குக் கொண்டுவர பல விஷயங்களை இங்கே பேசி, நிறைவேற்றியுள்ளோம், என்ன செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் அனைவரும் உறுதியாக உள்ளோம். அதற்கான உறுதிமொழி எடுத்தோம்.

குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் என்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள், இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும், ஆனால் சீனா என்ன செய்யவில்லை, ரஷ்யா என்ன செய்யவில்லை மற்றும் சவூதி அரேபியா என்ன செய்யவில்லை என்பதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். அதுவும் தேவையானது தான்.

இவ்வாறு பைடன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in