Published : 18 Mar 2016 10:24 AM
Last Updated : 18 Mar 2016 10:24 AM

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட் பாளர் போட்டியில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி வேட் பாளர் போட்டியில் டொனால்டு டிரம் பும் முன்னிலையில் உள்ளனர்.

அதிபர் வேட்பாளர் தகுதி

அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட 3 அடிப் படை தகுதிகள் அவசியம். அந்த நாட்டின் சட்டபூர்வ குடிமகனாகப் பிறந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 35 வயது நிறைவடைந் திருக்க வேண்டும். அமெரிக்காவில் 14 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்.

இவை அடிப்படை விதியாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக யாரும் அதிபர் வேட்பாளராக முடி யாது. அந்த நாட்டின் எழுதப்படாத சட்டத்தின்படி, மாகாண ஆளுநர் கள், செனட்டர்கள், ஐந்து நட்சத்திர அந்தஸ்துடைய ராணுவ தளபதிகள் அல்லது மெகா கோடீஸ்வர அரசியல் தலைவர்களே அதிபர் வேட்பாளராக போட்டியிட முடியும்.

உட்கட்சித் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதன்படி வரும் நவம்பர் 8-ம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி தரப்பில் 15 பேரும் எதிர்க் கட்சியான குடியரசு கட்சி தரப்பில் 31 பேரும் அதிபர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்த னர். இதில் 10 இந்நாள், முன்னாள் ஆளுநர்கள், 10 செனட்டர்கள் அடங்குவர்.

தற்போது இரு கட்சிகளிலும் அதிபர் வேட்பாளரைத் தேர்ந் தெடுக்க மாகாணம்வாரியாக உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஜனநாயக கட்சியைப் பொறுத்தவரை முன்னாள் வெளி யுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அந்த கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

மாகாணம் வாரியாக இதுவரை நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் ஹிலாரி 1561 பிரதிநிதிகள் வாக்கு களைப் பெற்று முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்து வெர்மாண்ட் ஆளுநர் பெர்னி சாண்டர்ஸுக்கு 800 வாக்குகள் கிடைத்துள்ளன. ஜனநாயக கட்சி யின் அதிபர் வேட்பாளராக மொத்தம் 2383 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற வேண்டும்.

டிரம்பா, குரூஸா?

குடியரசு கட்சியில் மெகா கோடீஸ்வர தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அவர் 621 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்து டெக்சாஸ் செனட்டர் டெட் குரூஸ் 396 வாக்கு களைப் பெற்றுள்ளார்.

குடியரசு கட்சியில் அதிபர் வேட் பாளராக 1237 பிரதிநிதிகள் வாக்கு களைப் பெற வேண்டும். அந்த கட்சி தரப்பில் இன்னமும் 21 மாகா ணங்களில் உட்கட்சித் தேர்தல் நடத் தப்பட உள்ளது. அதில் வெற்றி பெறுவது டிரம்பா, குரூஸா என்பது ஜூன் இறுதிக்குள் தெரிந்துவிடும்.

இதைத் தொடர்ந்து ஜூலை யில் இருகட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கும். அதன்பின்னரே அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x