நாங்களே எங்களை தற்காத்துக் கொள்வோம்: தைவான்

நாங்களே எங்களை தற்காத்துக் கொள்வோம்: தைவான்
Updated on
1 min read

பிற நாடுகளை சார்ந்திருக்கவில்லை, நாங்களே எங்களை தற்காத்துக் கொள்வோம் என்று தைவான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர், செங் கூறும்போது, “ நாங்கள் பிற நாடுகளை சாந்திருக்கவில்லை. ஒருவேளை சீனா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் எங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.பிற நாடுகள் எங்களுக்கு உதவுவது மகிழ்ச்சித்தான். ஆனால் தைவான் இதனை முழுமையாக சார்ந்திருத்திவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தைவான் அதிபர் சாய் இங் வென் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறும்போது, “ சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு தீவிரமாக உள்ளது. தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று நம்புகிறோம். அமெரிக்காவுடன் நாங்கள் வைத்திருக்கும் நீண்ட கால உறவவின் மீதும் அமெரிக்க மக்கள் மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" என்று கூறினார்.

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தைவான் உருவானது. என்றாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது. தேவைப்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீனா அவ்வப்போது கூறிவருகிறது.

சீனா சமீபத்திய ஆண்டுகளில் தைவானை சுற்றி தனது போர்ப் பயிற்சியையும் அதிகரித்துள்ளது. சீனா தனது தென்கிழக்கு பிராந்தியத்தில் தனது பழைய டிஎப்-11, டிஎப்-15 ரக ஏவுகணைகளை படிப்படியாக நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக மிக நவீன ஹைப்பர் சானிக் ஏவுகணைகளை (டிஎப்-17) நிறுத்தியுள்ளது.

இந்த ஏவுகணைகள் நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கக் கூடியவை ஆகும். சீனாவின் தென் கிழக்கில் உள்ள ஃபுஜியான், குவாங்டாங் மாகாணங்களில் கடற்படை தளங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களை சீனா விரிவுபடுத்தியுள்ளது. இதன் காரணமாக தைவான் - சீனாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in