மீண்டும் லாக்டவுன்: ரஷ்யாவை உலுக்கும் கரோனா: மாஸ்கோவில் கடும் கட்டுப்பாடு

மீண்டும் லாக்டவுன்: ரஷ்யாவை உலுக்கும் கரோனா: மாஸ்கோவில் கடும் கட்டுப்பாடு
Updated on
1 min read

ரஷ்யாவில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தலைநகர் மாஸ்கோவில் அடுத்த 11 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,159 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் 85 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாள்தோறும் கரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பு ரஷ்யாவில் அதிகரித்து வண்ணம் உள்ளது. கரோனா வைரஸுக்கு எதிராக முதல் முதலாகத் தடுப்பூசியை அறிமுகம் செய்த நாடு ரஷ்யா.

ஆனால் ரஷ்யாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் மட்டுமல்லாது உள்நாட்டிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட சிலர், இரண்டாவது தவணை தடுப்பூசி போட முடியாமல் காத்திருக்கின்றனர்.

இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த ரஷ்யாவில் ஊழியர்களுக்கு அக்டோபர் 30 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 7 ஆம் தேதி வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது என புதின் அறிவித்தார்.

இந்தநிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தபோதிலும் ரஷ்யாவில் கரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் முதல்கட்டமாக அடுத்த 11 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அவசியமின்றி வெளியே நடமாடவும், பயணிகள் செய்யவும், தடை செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in