ஏப்ரல் 1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் அமெரிக்கா அறிவிப்பு

ஏப்ரல் 1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் அமெரிக்கா அறிவிப்பு
Updated on
1 min read

அடுத்த நிதியாண்டுக்கான எச்-1பி வேலை விசா விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளப்படும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை (யுஎஸ்சிஐஎஸ்) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக யுஎஸ்சிஐஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வரும் 1-ம் தேதி முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெற்றுக் கொள்ளப்படும். விநியோகம் தொடங்கிய முதல் 5 வர்த்தக தினங்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய் வார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. விண்ணப்பங்களின் எண் ணிக்கை கண்காணிக்கப்பட்டு, உச்சவரம்பு எட்டப்பட்ட உடன் அது பற்றி பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

முதல் 5 வர்த்தக நாட்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம் புக்கும் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், கணினி உதவியுடன் குலுக்கல் முறையில் தேவையான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய் யப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in