பத்திரிகையாளரின் செல்பேசியைப் பறித்த நபர்: தனக்கே தெரியாமல் ஆயிரக்கணக்கானோருக்கு ஒளிபரப்பினார்

பத்திரிகையாளரின் செல்பேசியைப் பறித்த நபர்: தனக்கே தெரியாமல் ஆயிரக்கணக்கானோருக்கு ஒளிபரப்பினார்
Updated on
1 min read

பத்திரிகையாளரின் செல்பேசியைப் பறித்த நபர், தனக்கே தெரியாமல் ஆயிரக்கணக்கானோருக்கு தனது முகத்தை ஒளிபரப்பிய சம்பவம் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் தெருக்களில் பத்திரிகையாளர் ஒருவர் நிலநடுக்கம் குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்ததாகவும் அப்போது அங்கு பைக்கில் வந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரிடமிருந்து செல்போனைப் பறித்துச் சென்றுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லைவ்ஸ்ட்ரீமைப் பார்த்துக் கொண்டிருந்த பேஸ்புக் புள்ளிவிவரங்களின்படி, அந்த நபர் தனக்கே தெரியாமல் தனது முகத்தை 20,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பியுள்ளார்.

காணொலியில், செவ்வாய்க்கிழமை காலை கெய்ரோ மற்றும் எகிப்தின் பிற நகரங்களை உலுக்கிய நிலநடுக்கத்தின் விளைவுகளைப் படமாக்கும்போது பின்னணியில் பத்திரிகையாளரின் குரல் கேட்கிறது.

அந்த நபர் தொலைபேசியை நிருபரின் கையிலிருந்து பறிப்பதால் படப்பிடிப்பு தடைபடுகிறது. செல்போனை பறித்த வேகத்தில் லைவ்ஸ்ட்ரீமில் வீடியோ எடுக்கப்படுவதை நிறுத்த வேண்டுமென்று அந்த நபருக்கு தோன்றவில்லை.

ஒரு சிறு தடங்கலுக்குப் பிறகு, படப்பிடிப்பில் அடுத்த காட்சியாக திருடன் பைக் ஓட்டும் போது சாதாரணமாக சிகரெட்டைப் புகைப்பதைக் காணலாம், அவர் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு தன் முகத்தை நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறோம் என்பதையே மறந்துவிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவியபோது, போனின் கேமரா உருண்டு கொண்டே இருந்ததால் பலரும் அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பயனர்கள் இந்த சம்பவத்தை தங்கள் இணையத்தில் வேடிக்கை பார்த்ததால் இந்த வீடியோ 6.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் ஆயிரக்கணக்கான கருத்துகளையும் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in