Published : 21 Oct 2021 11:34 AM
Last Updated : 21 Oct 2021 11:34 AM

சீனாவில் தீ விபத்து: 3 பேர் பலி; பலர் காயம்

படம்: ட்விட்டர் உதவி

சீனாவின் லியான்னிங் மாகாணத்தில் வடக்குப் பகுதியில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ லியான்னிங் மாகாணத்தில் வடக்குப் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வியாழக்கிழமை கேஸ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 30க்கும் அதிகமான நபர்கள் காயமடைந்தனர். பல மணி நேர போராட்டத்திற்கு மீட்புப் படையினர் தீயை அணைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவில் தொழிற்சாலைகளில் தீ விபத்துகள் ஏற்படு சகஜமான ஒன்றாக மாறி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக தொழிற்சாலைகளின் மோசமான கட்டுமானம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜூன் மாதம் ஹுபே மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலியாகினர்.

சுரங்க விபத்துகள் அதிகம்

உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடான சீனாவில் இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது ஏற்படுகின்றன. தேவையான பாதுகாப்பு அம்சங்களை நிலக்கரி சுரங்க நிறுவனங்கள் முறையாக கடைபிடிக்காததால் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சீனாவில் ஆண்டுதோறும் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x