

நேபாளத்தில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 43 பேர் உயிரிழந்தனர். இதுவரை 30 பேரைக் காணவில்லை.
நேபாளத்தில் ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை பருவமழை பெய்யும். ஆனால், தற்போது அக்டோபர் மாதத்திலும் மழை பெய்து வருகிறது. கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 43 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 30 பேரைக் காணவில்லை.
சேட்டி எனும் கிராமத்தில் 60 பேர் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு தவித்து வருகின்றனர். தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 350 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கிராமம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகள் சுணங்கியுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு பரவலாக கனமழை வாய்ப்புள்ளதாகவும், கிழக்குப் பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் காத்மாண்டு வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
கனமழையால் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கி விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளன.
இந்தியாவில் கேரளா, உத்தராகண்ட் மாநிலங்கள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை நாடான நேபாளத்தில்