

4000 டன் மாவை ஆப்கனுக்கு அனுப்பிவைத்தது கஜகஸ்தான். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெறுகிறது. தலிபான் ஆட்சியை உலக நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை.
அங்கு பொருளாதாரம் முடங்கியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
இதனால் உலக நாடுகள் தாராளமாக உதவ வேண்டும் என ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், கஜகஸ்தானில் இருந்து 4000 டன் மாவு ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து கஜகஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் நன்றி தெரிவித்துள்ளது. மொத்தம் 28 கன்டெய்னரில் மாவு வந்துள்ளது.
முதலில் இந்த கன்டெய்னர்கள் அனைத்தும் பால்க் மாகாணத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. பால்க் மாகாண தலைவர் லத்தீஃப் கஜகஸ்தான் அரசின் உதவிக்கு ஆப்கன் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.