ஆப்கனில் இந்திய தூதரகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 6 தீவிரவாதிகள், 1 வீரர், 8 பொதுமக்கள் பலி

ஆப்கனில் இந்திய தூதரகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 6 தீவிரவாதிகள், 1 வீரர், 8 பொதுமக்கள் பலி
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தியதில் 6 தீவிரவாதிகள், 1 வீரர், 8 பொதுமக்கள் பலியாயினர்.

தலிபான் தீவிரவாத அமைப் புக்கும் அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை இந்த வாரம் தொடங்க இருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நங்ரஹார் மாகாண தலைநகர் ஜலாலாபாத் நகரில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் துணைத் தூதரகங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில மாதங் களாக அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய துணைத் தூதரக நுழைவாயில் அருகே நேற்று ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர்களில் ஒருவர் கார் வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். மற்றொருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் 2 தீவிரவாதிகளும் கொல் லப்பட்டனர்.

மேலும் 4 தீவிரவாதிகள் அலு வலகத்துக்குள் நுழைய முயன் றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டி ருந்த இந்தோ-திபெத் எல்லைப் படையினர் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பின்னர் ஆப்கன் பாதுகாப்புப் படையினரும் சேர்ந்து பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுதவிர பொதுமக்களில் 8 பேரும், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் கொல்லப் பட்டனர். 19 பேர் காயமடைந்தனர். எனினும், தூதரக அதிகாரிகள் பத்திரமாக இருப்பதாக மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in