

வங்கதேசத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு இந்துக்கள் துர்கா பூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதில் துர்கை அம்மனின் முழங்கால் மீது முஸ்லிம்களின் புனித நூலான குரான் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இதையடுத்து கடந்த புதன்கிழமை அங்கு இந்துக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் பேகம்கஞ்ச் நகரில் முஸ்லிம்கள் நேற்று முன்தினம் ஒரு கோயில் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது கோயில் நிர்வாகிகளில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார். மேலும் ஒரு இந்து ஆணின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இதனால் வன்முறைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.