எம்.பி.கொலை; எங்கள் இதயங்கள் அதிர்ச்சியாலும், சோகத்தாலும் நிரம்பியுள்ளன: போரிஸ் ஜான்சன்

எம்.பி.கொலை; எங்கள் இதயங்கள் அதிர்ச்சியாலும், சோகத்தாலும் நிரம்பியுள்ளன: போரிஸ் ஜான்சன்
Updated on
1 min read

எம்.பி. டேவிட் அமெஸ் மரணத்தால் இன்று எங்கள் இதயங்கள் அதிர்ச்சியாலும், சோகத்தாலும் நிரம்பியுள்ளன என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் எம்.பி. டேவிட் அமெஸ். அவருக்கு வயது 69. பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் இன்று (சனிக்கிழமை) எசக்ஸ் பகுதியில் உள்ள பெல்ஃபேர்ஸ் மெத்தடிஸ்ட் தேவாலயத்துக்குச் சென்றிருந்தார். அங்கு அந்தப் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களைச் சந்தித்தார்.

அப்போது திடீரென ஒரு மர்ம நபர் டேவிட் அமெஸைக் கத்தியால் குத்தி அவர் மீது தாக்குதல் நடத்தினார். இதில் டேவிட் அமெஸ் படுகாயங்களுடன் சரிந்து விழுந்தார். அப்பகுதிக்கு மருத்துவக் குழு எம்.பி. டேவிட்டுக்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் மரணித்துவிட்டார். கத்தியால் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “மிகவும் அன்பானவர். நேசமாகப் பழகக்கூடியவர். எம்.பி. டேவிட் அமெஸ் மரணத்தால் இன்று எங்கள் இதயங்கள் அனைத்தும் அதிர்ச்சியாலும், சோகத்தாலும் நிரம்பியுள்ளன. சுமார் 40 வருடங்களாக பிரிட்டன் மக்களுக்காக அவர் சேவை ஆற்றியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

எம்.பி. டேவிட் அமெஸின் மரணத்துக்கு பிரிட்டன் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். எம்.பி. கொலை செய்யப்பட்டது பிரிட்டன் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in