

2021ம் ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் 40 சதவீத மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை இலக்காக வைத்துள்ளோம்,,2022ம் ஆண்டு நடுப்பகுதி்க்குள் 70 சதவீதமாக எட்டப்படும் என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவி்த்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் நேற்று ஜெனிவாவில் நிருபர்களுக்குப் பேட்டிஅளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:
2022ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுமக்களிலும் 70 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்துள்ளம், 2021ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம்40சதவீதம் மக்களுக்குச் செலுத்தப்படும்.
இந்த இலக்கை அடைவதற்கு அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஒத்துழைக்க வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கு குறைந்தபட்சம் 1100 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படும். தற்போது தடுப்பூசி சப்ளையில் பிரச்சினை இருப்பதால் ஒதுக்கீடு செய்வதிலும் சிக்கல் இருக்கிறது.
உலகளவில் மாதத்துக்கு தடுப்பூசி தயாரிப்பு 150கோடியாக இருக்கிறது. இது உலகத்தின் தேவையை நிறைவு செய்ய போதுமானதாக இருக்கும், பரவலாக பகிர்ந்தளிக்க முடியும். 640 கோடி டோஸ் தடுப்பூசி தற்போது உலகளவில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருபகுதி முழுமையாக தடுப்பூசி செலுத்திவிட்டனர்.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் உலகத் தடுப்பூசியில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே பெற்றுள்ளனர். 5 சதவீதத்துக்கும் குறைவாகவே தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். செப்டம்பர் இறுதிக்குள் உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்திருந்தோம் ஆனால், 56 நாடுகளால் நிறைவேற்றமுடியவில்லை.
தடுப்பூசி பரவலாகக் கிடைக்காதது என்பது கரோனாவுக்கு உற்ற நண்பன். ஆதலால் தடுப்பூசியைப் பகிர்ந்தளித்தல், ஸ்வாப், தொழில்நுட்பத்தை பகிர்தல், உள்ளிட்ட முன்னுரிமை நடவடிக்கைகள் மூலம் உயிரிழப்பைத் தடுக்க முடியும், பாதிப்பைக் குறைக்க முடியும். சமூக பொருளாதார நடவடிக்கைகள், மூலம் புதிய உருமாற்ற வைரஸ் வரலாமல் தடுக்க முடியும். தடுப்பூசி உலக மக்களுக்கு பரவலாகக் கிடைக்க ஜி20 நாடுகள் உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.