புதிய அரசமைப்பு சட்டம் உருவாக்க அரசியல் சாசன நிர்ணய சபை: நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

புதிய அரசமைப்பு சட்டம் உருவாக்க அரசியல் சாசன நிர்ணய சபை: நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
Updated on
1 min read

இலங்கையில் புதிய அரசமைப்பு சட்டத்தை வரையறுக்க அரசியல் சாசன நிர்ணய சபை நியமிக்கப் பட உள்ளது. இதுதொடர்பான தீர்மானம் அந்த நாட்டு நாடாளு மன்றத்தில் நேற்று முன்தினம் நிறை வேற்றப்பட்டது.

இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு பண்டாரநாயகா காலத் தில் அரசமைப்பு சட்டம் வரை யறுக்கப்பட்டு 1972 மே 22-ல் அமல் செய்யப்பட்டது. அதற்கு மாற்றாக 1978-ல் புதிய அரசமைப்பு சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரியில் இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேனா பொறுப்பேற்றார். கடந்த ஆகஸ்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார்.

இதைத் தொடர்ந்து 1978 அரசமைப்பு சட்டத்துக்கு மாற்றாக புதிய அரசமைப்பு சட்டத்தை வரையறுக்க முடிவு செய்யப் பட்டது. இதற்காக அரசியல் சாசன நிர்ணய சபையை நியமிக்க வகை செய்யும் தீர்மானம் கடந்த 9-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

‘இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அரசியல் சாசன நிர்ணய சபையின் தலைவராகவும் 7 பேர் துணைத் தலைவர் களாகவும் செயல்படுவார்கள். நாடாளுமன்ற எம்.பி.க்கள் அனைவரும் உறுப்பினர்களாக பதவி வகிப்பார்கள்.

அரசியல் சாசன நிர்ணய சபை சார்பில் நாடு முழுவதும் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அனைத்து தரப்பு மக்கள் கூறும் ஆலோசனைகளின் பேரில் புதிய அரசமைப்பு சட்டம் வரையறுக்கப்படும் என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in