துருக்கி கார் குண்டு தாக்குதலில் 37 பேர் பலி

துருக்கி கார் குண்டு தாக்குதலில் 37 பேர் பலி
Updated on
1 min read

துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர்.

அங்காராவின் மையப் பகுதியான கிஸிலாயில் நேற்று முன்தினம் இரவு காரில் வைக்கப் பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் அந்த வழியாகச் சென்ற பஸ்கள், கார்கள் உருக் குலைந்தன.

இதுகுறித்து துருக்கி சுகாதாரத் துறை அமைச்சர் மெஹமத் கூறிய தாவது: கார் குண்டு தாக்குதலில் இதுவரை 37 பேர் பலியாகி உள்ள னர். 125 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அந்த நாட்டு அதிபர் எர்டோகன் கூறியதாவது: நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நோக்கில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் நாட்டு மக்கள் அஞ்ச வேண்டிய அவசிய மில்லை. இரும்புக் கரம் கொண்டு தீவிரவாதம் ஒடுக்கப்படும். அங்காரா தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். வெகு விரைவில் தீவிரவாதிகள் நமது காலடியில் மண்டியிடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

கார் குண்டு தாக்குதலுக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப் பேற்கவில்லை. எனினும் குர்து இன போராளிகள் தாக்குதலை நடத்தி யிருக்கக்கூடும் என்று துருக்கி அரசு சந்தேகிக்கிறது.

இதைத் தொடர்ந்து தடை செய் யப்பட்ட குர்து தொழிலாளர் கட்சி முகாம்களை குறிவைத்து துருக்கி விமானப் படை நேற்று திடீர் தாக்குதல் நடத்தியது. சுமார் 11 போர் விமானங்கள் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. இதில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in