தாய்லாந்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் வெள்ளத்தில் மூழ்கியது

படம் உதவி: ட்விட்டர்.
படம் உதவி: ட்விட்டர்.
Updated on
1 min read

தாய்லாந்தில் பெய்த கனமழை காரணமாக வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான ஆயுத்தாயாவில் பல கோயில்கள் நீருக்கடியில் சென்றுவிட்டன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “தாய்லாந்தில் பெய்த கனமழை காரணமாக இரு வாரங்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான, ஆயுத்தாயா நகரம் நீருக்குள் மூழ்கியுள்ளது. சுமார் 40க்கும் அதிகமான கோயில்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த பத்து வருடங்களில் தாய்லாந்து சந்தித்த மோசமான வெள்ளம் இதுவாகும்.

கனமழை காரணமாக 32 மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 9 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர” என்று செய்தி வெளியாகியுள்ளது.

காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.

எனவே, உலக வெப்பமயமாக்கலைத் தடுக்க, வளர்ந்த நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in