ஃபேஸ்புக், வாட்ஸ் அப் சேவை பாதிப்பு: மார்க் ஸக்கர்பர்க் எத்தனை கோடிகளை இழந்தார் தெரியுமா?

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் சேவை பாதிப்பு: மார்க் ஸக்கர்பர்க் எத்தனை கோடிகளை இழந்தார் தெரியுமா?
Updated on
1 min read

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் சேவை பாதிக்கப்பட்டதன் விளைவாக அதன் நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பர்க்குக்கு சுமார் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக வலைதளச் செயலிகளான இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற செயலிகள் நேற்று இரவு முதல் ஆறு மணி நேரத்துக்கு உலகம் முழுவதும் முடங்கின. இதனால் அவற்றின் கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்கள் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் ஆறு மணி நேரத்துக்கு ஃபேஸ்புக் செயலி செயல்படாத காரணத்துக்காக அந்நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் மன்னிப்பு கோரினார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மெசஞ்சர் சேவைகள் இப்போது திரும்பக் கிடைக்கின்றன. தடங்கலுக்கு வருந்துகிறேன். நீங்கள் நேசிக்கும், உங்கள் அக்கறைக்குப் பாத்திரமானவர்களுடன் தொடர்பில் இருக்க எங்களின் சேவைகளை எவ்வளவு தூரம் நம்பியிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்" என்று பதிவிட்டார்.

இந்த நிலையில் தொடர்ந்து ஆறு மணி நேரமாக உலக அளவில் ஃபேஸ்புக் சேவை தடைப்பட்டதன் விளைவாக அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஃபேஸ்புக் சந்தை மதிப்பு 5% சரிந்தது. இதன் காரணமாக மார்க் ஸக்கர்பர்க்குக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், மார்க் ஸக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு ரூ.52 ஆயிரம் கோடியாகச் சரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஸக்கர்பர்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in