

2021ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.
வழக்கமாக நோபல் பரிசுகள் அக்டோபர் மாதத்திலிருந்து அறிவிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகளான டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகிய இருவருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
உடலில் உள்ள வெப்பம், குளிர், உடல் வலியைத் தொடாமல் கண்டறியும் ஆய்வுக்காக மருத்துவத்துக்கான நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுகிறது. அற்புதமான கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகளுக்கு நோபல் கமிட்டி குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
வரும் 11ஆம் தேதி வரை நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன.