காபூலில் மசூதி அருகே குண்டுவெடிப்பு: மூவர் கைது

காபூலில் மசூதி அருகே குண்டுவெடிப்பு: மூவர் கைது
Updated on
1 min read

காபூல் மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தானிலிருந்து ஆகஸ்ட் மாதம் இறுதியில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், ஆப்கனில் தற்கொலைப் படை தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

தலிபான்கள் மசூதி அருகே வெற்றிப் பேரணி நடத்திய பிறகு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலி பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் கலில் கிரிமி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. இதுவரை எந்த ஒரு நாடும் ஆப்கானிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. இருப்பினும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தலிபான்கள் கட்டவிழ்த்துள்ளனர். தலிபான்கள் ஆட்சிக்குப் பின் ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in