Published : 02 Oct 2021 09:00 PM
Last Updated : 02 Oct 2021 09:00 PM

சீன எல்லையில் தற்கொலைப் படையை நிறுத்த தலிபான்கள் திட்டம்

அண்டை நாடுகளுடான எல்லையில் தற்கொலைப் படையை நிறுத்த திட்டமிட்டுள்ளனர் தலிபான்கள். குறிப்பாக, படாக்‌ஷான் மாகாணத்தை ஒட்டிய எல்லையில் இந்தப் படைகள் நிலைநிறுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

படாக்‌ஷான் மாகாணத்தை ஒட்டி தஜிகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் உள்ளன.

இது குறித்து ஆப்கனின் காமா ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள படாக்‌ஷான் மாகாண ஆளுநர் முல்லா நிசார் அஹமதி அளித்தப் பேட்டியில், "படாக்‌ஷான் மாகாணத்தில் சீனா, தஜிகிஸ்தான் ஒட்டிய எல்லைப் பகுதியில் தற்கொலைப் படை நிலைநிறுத்தப்படும். வடகிழக்குப் பகுதியில் இவர்கள் நிறுத்தப்பட்டுவார்கள்.இந்தப் படைக்கு லஷ்கர் இ மன்சூரி என்று பெயர் சூட்டியுள்ளோம்.

முதற்கட்டமாக படாக்‌ஷானில் பணியமர்த்தப்படும் இவர்கள் படிப்படியாக நாட்டின் அனைத்து எல்லைகளிலும் நிறுத்தப்படுவார்கள்.

இந்தத் தற்கொலைப் படையினர் மட்டும் இல்லாவிட்டால் ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகளை விரட்டியது சாத்தியமாகி இருக்காது. இவர்கள் துணிச்சலுடன் வெடிப்பொருள் நிறைந்த கோட்டை அணிந்து கொண்டு ஆப்கனில் இருந்த அமெரிக்க தளங்களைத் தாக்கி ஒழித்த வீரர்கள். இவர்களுக்கு பயமென்பதே கிடையாது. அல்லாவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்" என்று கூறினார்.

லஷ்கர் இ மன்சூரி தலிபான்களின் தற்கொலைப் படையென்றால், பத்ரி 313 என்பது தலிபான்களின் மற்றொரு பலம் வாய்ந்த படையாகக் கருதப்படுகிறது. அதிநவீன ஆயுதங்களை சர்வசாதாரணமாக இயக்கக் கூடிய பத்ரி 313 படையினர் தற்போது காபூல் சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x