

உலகம் காந்தியின் வழியில் அமைதி, சகிப்புத்தன்மையைப் பின்பற்ற வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ் தெரிவித்துள்ளார்.
காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று (அக். 02) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் குத்ரேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெறுப்பும், பிரிவினையும், மோதல்களும் மலிந்து கிடக்கிறது. அதனால், இப்போது அமைதி, நம்பிக்கை, சகிப்புதன்மை நிறைந்த புதிய காலத்தை வரவேற்க வேண்டியுள்ளது. சர்வதேச அஹிம்சை தினமான இன்று காந்தியின் அமைதி வழியில் நடந்து எல்லோருக்கும் எதிர்காலத்தை உறுதி செய்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.
காந்தி பிறந்தநாள் உலகளவில் சர்வதேச அஹிம்சை தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு நாடுகளிலும் காந்திக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.