Last Updated : 29 Sep, 2021 06:07 PM

 

Published : 29 Sep 2021 06:07 PM
Last Updated : 29 Sep 2021 06:07 PM

ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க பிரத்யேக ஆபரேஷனை அறிவித்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தானிலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க பிரத்யேக ஆபரேஷனை அறிவித்துள்ளனர் தலிபான்கள்.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அதன் பின்னர் அங்கு தலிபான்கள் முறைப்படி ஆட்சியமைத்தனர். ஆனாலும் உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவளிக்க இன்றளவும் தயக்கம் காட்டிவருகிறது.

ஆப்கானிஸ்தான் மண்ணை பல்வேறு தீவிரவாத அமைப்புகளும் தங்களின் செல்வாக்கை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்; அங்கிருந்து பிற நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத செயல்களுக்கு சதித் திட்டம் தீட்டலாம் என்று அச்சம் தெரிவித்துவருகிறது.

இந்நிலையில், ஆப்கனில் செயல்படும் ஐஎஸ் பிரிவை, குறிப்பாக உள்ளூர் கோராசன் பிரிவை அழிக்க தலிபான்கள் பிரத்யேக ஆபரேஷனை அறிவித்துள்ளனர்.

ஜலாலாபாத், நங்கர்ஹர் என சில இடங்களில் அண்மையில் மூன்று வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடத்தப்பட்டன. இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.

யார் இந்த ஐஎஸ்ஐஎஸ்-கோராசன் அமைப்பினர்?

* ஐஎஸ்-கோராசன் அமைப்பு ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கோராசன் மாகாணத்தில் இயங்கும் முக்கிய தீவிரவாத அமைப்பாகும்.

* ஐஎஸ்-கோராசன் பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பில் இருந்து அதிருப்தியில் வெளியேறியவர்களும், ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பில் இருந்து வெளியேறியவர்களும் சேர்ந்து உருவாக்கிய தீவிரவாத அமைப்பாகும்.

* தெற்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவில் இருக்கும் இந்த ஐஎஸ்-கோராசன் அமைப்பினர், ஒருகட்டத்தில் வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

* அமெரிக்க படைகளின் தாக்குதலாலும், தலிபான்களின் தாக்குதலாலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இழந்தனர்.

* ஐஎஸ்-கோராசன் என்பது தலிபான்களை விட மிகவும் சிறிய அமைப்பாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x