Published : 28 Sep 2021 08:33 PM
Last Updated : 28 Sep 2021 08:33 PM

பேஸ்புக் வீடியோவால் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் தாயுடன் இணைந்த மகன்

பேஸ்புக் வீடியோவால் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது தாயுடன் இணைந்துள்ளார் வங்கதேசத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர்.

அப்துல் குத்தூஸ் முன்ஸிக்கு 10 வயது இருந்தபோது அவர் வீட்டைவிட்டு வெளியேறினார். மேற்கே உள்ள ராஜ்ஸஹி எனும் கிராமத்திற்குச் சென்றார். ஆதரவற்று திரிந்த அவரை அந்த ஊரைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் தத்தெடுத்துக் கொண்டனர்.

ஆண்டுகள் பல கடந்துவிட்டன. குத்தூஸுக்கு திருமணமாகி 2 மகன்கள், 5 மகள்கள் இருக்கின்றனர். ஆனால், முதுமையை எட்டிய அவருக்கு தாய், தந்தை, சொந்த ஊர் நினைவு வாட்டி வதைத்து.

இதனால் அவர் தனது நண்பர்களின் உதவியுடன் பேஸ்புக்கில் ஒரு வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். அதில், தான் தனது குடும்பத்தாரை மீண்டும் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். குத்தூஸுக்கு அவருடையை சொந்த ஊர் பிரம்மன்பாரியா மற்றும் பெற்றோரின் பெயர் மட்டுமே நினைவில் இருந்தது.

இந்நிலையில் குத்தூஸின் வீடியோவைப் பார்த்த அவரது சொந்த ஊரைச் சேர்ந்த நபர் ஒருவர் குத்தூஸைத் தொடர்பு கொண்டு அனைத்து விவரங்களையும் கூறினார்.

குத்தூஸின் தாயார் மங்கோலா நெஸ்ஸா இன்னும் உயிருடன் இருப்பதையும் அவர் தனது 100 வயதை நெருங்கிக் கொண்டிருப்பதையும் அந்த நபர் தெரிவித்தார்.

இதனால், குத்தூஸ் தனது சொந்த ஊருக்குப் புறப்பட்டார். 70 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தனது தாயை சந்தித்தார். அவரது தாயார் மகனின் நெற்றியில் இருந்த தழும்பை சரிபார்த்து அவரது அடையாளத்தை உறுதி செய்தார்.

தாயும், மகனும் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்த நெகிழ்ச்சியான நிகழ்வைக் காண ஏராளமானோர் திரண்டனர்.

குத்தூஸ் தனது தாயின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு, அம்மா, நான் வந்துவிட்டேன். நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள் என்று கூற ஒட்டுமொத்த கிராமமுமே சில நிமிடங்கள் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x