

பிரிட்டனில் லாரி ஓட்டுநர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள தால், எரிபொருளை பொதுமக்கள் மொத்தமாக வாங்கியதால் பெட்ரோல் பங்க்குகள் காலியாகி உள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது. இதை யடுத்து, லாரி ஓட்டுநர்களுக்கு பிரிட்டனில் தட்டுப்பாடு நிலவு கிறது. இதனால், உணவுப்பொருள் முதல் எரிபொருள் வரையிலான விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டு நுகர்வு பொருட் களின் விலை உயர்ந்து வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நிலை இன்னும் மோசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தட்டுப்பாடு அச்சம் காரணமாக பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனாலும், முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளை நேற்று முன்தினம் முற்றுகையிட்ட பொதுமக்கள், தங்கள் வாகனங் களில் எரிபொருளை நிரப்பினர். இதனால், 90 சதவீத பெட் ரோல் பங்குக்குகள் எரிபொருள் தீர்ந்ததால் மூடப்பட்டன.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் போட்டி சட்டங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ள அரசு, எரிபொருள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள் இணைந்து செயல்பட அனுமதி அளித்துள்ளது.
மேலும் வெளிநாட்டு லாரி ஓட்டுநர்கள் 5 ஆயிரம் பேருக்கு தற்காலிக விசா கொடுக்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு நேற்றுமுன்தினம் அறிவித்தது. ஆனால்,அரசின் இந்த திட்டம் குறுகிய காலத்துக்கு மட்டுமே பயனளிக்கும் என்றும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது என்றும் வர்த்தக துறையினர் தெரிவித்துள்ளனர்.