இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும்; ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி உரை: முக்கிய தகவல்கள்

இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும்; ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி உரை: முக்கிய தகவல்கள்
Updated on
1 min read

இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும், இந்தியா சீர்திருத்தம் அடையும்போது உலகமும் மாறும் என ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் இன்று உரையாற்றினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:

* இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா சுதந்திரத்தின் 75 வது ஆண்டை கொண்டாடியது. பன்முகத்தன்மைதான் எங்கள் வலுவான ஜனநாயகத்தின் அடையாளம்.

* வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அனைவருக்குமானதாகவம் எல்லோரையும் அடையும் விதத்தில் இருக்க வேண்டும்.

* தீவிரவாத அச்சுறுத்தல் உலகின் பல பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், முழு உலகமும் அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனையை கொண்டு செல்ல வேண்டும்.

* ஆப்கானிஸ்தான் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும்.

* நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எந்த நாடும் அங்குள்ள சூழ்நிலையை பயன்படுத்தி தங்கள் சுயநலன்களுக்கு ஒரு கருவியாக பயன்படுத்த முயற்சிக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஒரு பரவலான, உலகளாவிய, அனைவரையும் வளர்க்கும் ஒரு வளர்ச்சி செயல்முறையை நாங்கள் நம்புகிறோம். இந்தியா வளரும் போது உலகம் வளரும். இந்தியா சீர்திருத்தம் அடையும்போது உலகமும் மாறும்.

* கோவிட் -19 க்கான உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது.

* தீவிரவாதத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தும் நாடுகள், மற்றவர்கள் மீது தாக்கும் அதே கருவியால் தாங்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in