

உலகெங்கும் உள்ள பலருக்கும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உத்வேகமாக இருக்கிறார். இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என பிரதமர் மோடி தெரிவி்த்தார்
பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் சந்திப்பு, ஐ.நா. பொதுக்கூட்டத்தில் உரையாற்றுதல், குவாட் மாநாட்டில் பங்கேற்பு, பெரு நிறுவனத் தலைவர்களுடன் சந்திப்பு என பல நிகழ்ச்சிகளி்ல் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரி்ஸ் பதவி ஏற்றபின் கரோனா விவகாரம் தொடர்பாக தொலைப்பேசியில் மட்டுமே பேசிய பிரதமர் மோடி நேற்று நேரடியாக வெள்ளைமாளிகையில் சந்தித்தார். பிரதமர் மோடியை ஜனநாயகக்கட்சியின் எம்.பி. 56வயதான டக்லஸ் எம்ஹாப் வரவேற்றார்.
இந்தச் சந்திப்பின் போது இரு தரப்பு நாட்டு உறவுகள், இந்திய-பசிபிக் கடல் பிரச்சினைகள், கரோனா வைரஸ் தடுப்பு, ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.
இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, பிரதமர் மோடியும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் முகக்கவசம் அணிந்தே பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவும் அமெரி்க்காவும் இயற்கையான கூட்டாளிகள். ஒருமித்த மதிப்புகள், ஒரேமாதிரியான புவிசார்ந்த அரசியல் நலன்கள் இரு நாடுகளுக்கும் இருக்கின்றன. இந்தியாவும் அமெரிக்காவும் மிகப்பெரிய மற்றும் பழமையான ஜனநாயகத்தைக் கொண்டவை. இரு நாடுகளும் உயர்ந்த மதிப்புகளையும் பகிர்ந்து கொண்டு, கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பையும் படிப்படியாக அதிகரித்துள்ளன.
கமலா ஹாரிஸ் உலகெங்கும் உள்ள மக்களுக்கு உத்வேகமாகத் திகழ்கிறார். அதிபர் ஜே பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையின் கீழ் இந்தியா, அமெரிக்கா உறவு புதய உச்சத்தைத் தொடும் என்று நான் நம்புகிறேன்.
அமெரிக்க அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக நீங்களும் பொறுப்பேற்றபோது கடினமான சவால்களைச் சந்தித்தீர்கள். குறுகிய காலத்தில் உங்கல் அரசு பல சாதனைகளைச் செய்துள்ளது. குறிப்பாக கரோனாவைக் கட்டுப்படுத்துதல், காலநிலை மாற்றம் ஆகியவற்றில் முடிவெடுத்தமைக்கு உங்களுக்குபாராட்டுகள்” எனத் தெரிவித்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ இரு தலைவர்கலும் சமீபத்தில உலகளவிலான நிகழ்வுகள், குறிப்பாக ஆப்கானிஸ்தான் நிலைமை, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான சூழலை உருவாக்குவது ஆகியவைபற்றி பேசினர்.
தங்கள் நாடுகளில் கரோனா பரவல் சூழல், அதைக் கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கை, தடுப்பூசி செலுத்துதல், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர்.
இந்திய-பசிபிக் கடல்பகுதியில் சீனா அத்துமீறி செயற்கையாக தீவுகளைஅமைத்து வருவது குறித்து இரு தலைவர்களும் பேசினர்.காலநிலை மாற்றம் குறித்த முக்கியத்துவம் அதைத் தடுக்கஎடுக்கும் முயற்சிகள் குறித்து பேசினர்.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு அதிகரித்துள்ளதையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். சுற்றுச்சூழலைக் காக்க இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்றபின் கரோனா பரவல் மிகவும் கடினமாக இருந்த சூழலில் அவருடன் பேசுவதற்கு தனக்கு வாய்ப்புக் கிடைத்தது. உங்களின் வார்்த்தைகளை அந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன் என மோடி குறிப்பிட்டார்.
இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்த நிலையில் ஒரு குடும்பத்தைப்போல், கனிவுடன் பல்ேவறு உதவிகளை அமெரிக்கா அளித்தது. அதுமட்டுமல்லாமல் கமலா ஹாரிஸ் கனிவுடன் இந்திய மக்கள் குறித்துப் பேசியது நினைவில் இருக்கிறது. அதற்கு என் மனதில் ஆழத்திலிருந்து நன்றி தெரிவி்க்கிறேன்”
இ்வ்வாறு அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.