ஐ.நா பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதார அமைச்சருக்கு கரோனா

ஐ.நா பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதார அமைச்சருக்கு கரோனா
Updated on
1 min read

ஐ.நா. வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதார அமைச்சர் மார்செலோ குவெரோகோவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனோரோவுடன் 76வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டார்.

பொதுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக தொழில் முதலீட்டாளர்களை சந்தித்துப் பேசினார். மேலும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை, பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனோரோ சந்தித்தபோது மார்செலோவும் உடன் இருந்தார்.

மார்செலோவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்றவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

மார்செலோ இத்தனைக்கும் இரண்டு டோஸ் சீனாவின் கரோனாவாக் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் தன்னைத் தானே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நியூயார்க்கில் இருந்து நாடு திரும்பும் தனது குழுவினருடன் தான் திரும்பப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in