பாகிஸ்தான் மட்டுமல்ல வேறு யாரும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது: தலிபான்கள்

பாகிஸ்தான் மட்டுமல்ல வேறு யாரும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது: தலிபான்கள்
Updated on
1 min read

பாகிஸ்தான் மட்டுமல்ல வேறு யாரும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது என தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹீத் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு எதிராகப் போராடிய தலிபான்கள் வசம் தற்போது ஆப்கானிஸ்தான் வந்துவிட்டது. அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியவுடன் ஆப்கானிஸ்தானை தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி காபூல் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் வெளியேறியது குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகின. இறுதியாக அஷ்ரப் கனி குடும்பத்தினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்ததும் உறுதியானது.

இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் வசம் வந்தது. அதன்பின்னர் 70க்கும் மேற்பட்டோர் கொண்ட இடைக்கால அரசை தலிபான்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அடுத்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியான முறையில் ஆட்சி நடக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தலிபான்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் யோசனை தெரிவித்தார்.

சிஎன்என் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பிரதமர் இம்ரான் கான், ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்களின் கைகளில் உள்ளது. இப்போது அவர்கள் மனதுவைத்து அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து அனைவரையும் உள்ளடக்கிய ஓர் ஆட்சியைக் கொடுத்தால் அடுத்த 40 ஆண்டுகளுக்கு நாட்டில் அமைதி நிச்சயமாக நிலவும். ஆனால், இதில் ஏதேனும் சறுக்கல் ஏற்பட்டால் பெரிய குழப்பத்துக்கு வழிவகுக்கும். கூடவே உலகின் மிகப்பெரிய மனிதநேய நெருக்கடி ஏற்படும், அகதிகள் பிரச்சினை உருவெடுக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.

இதனை முன்வைத்து பேசியுள்ள தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹீத், "பாகிஸ்தான் மட்டுமல்ல வேறு யாரும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது. நாங்கள் இப்படித்தான் ஆட்சி நடத்த வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை நடத்த வேண்டும் என்று கட்டுப்படுத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in