

ரஷ்யாவின் அடுத்த அதிபராவதற்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷோய்குவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபராக 2000 ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்துவிட்டார் விளாடிமிர் புதின். இந்நிலையில் அடுத்து வரவிருக்கும் 2024 ஆன் ஆண்டும் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விகள் தற்போதே எழுந்துள்ளன.
ஆனால் அடுத்த மாதம் 7 ஆம் தேதி (அக்டோபர் 7) அதிபர் புதினுக்கு 69 வயதாகிறது. வயதும் அவருக்கு ஏற்பட்டுள்ள சில நரம்பியல் கோளாறுகள் அவரது அடுத்த வாய்ப்பின் மீது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
இதனாலேயே ரஷ்ய அதிபரின் அபிமானம் பெற்றவரான அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் செகெய்யின் பெயர் அதிபர் போட்டிக்கான பெயர்ப்பட்டியலில் அடிபடுகிறது.
செர்கெய் ஷோய்கு புத்த மதத்தைச் சேர்ந்தவர். இவரது பிறப்பிடம் துவா. இது வடமேற்கு சீன எல்லையை ஒட்டியுள்ளது. இந்த பிராந்தியம் கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் பெயர் போனது. செர்கெய் 1990களில் இருந்தே அரசியலில் உள்ளார். அந்த காலகட்டத்தில் அவர் அவசரகால அமைச்சராக இருந்தார்.
பின்னாளில் கிரிமியா நாட்டை இணைக்கும் விவகாரத்திலும், சிரிய அதிபர் பஷார் அல் அசாத் ஆட்சியைக் காப்பாற்றியதிலும் இவருக்குப் பெரும் பங்கு இருக்கிறது.
66 வயதான செர்கெய் அவ்வப்போது புதினுடன் மீன் பிடித்தலிலும் வேட்டையாடுதலிலும் ஈடுபடும் வீடியோக்கள் வெளியாவதுண்டு. இது மறைமுகமாக புதின் செர்கெயை அரசியல் வாரிசு போல் அறிவிக்கும் செயல் என்று அந்நாட்டு ஊடகங்கள் எழுதி வருவதும் குறிப்பிடத்தக்கது.