கருப்பினத்தவருக்கு ஆதரவு?- மெட் காலாவில் வைரலான கிம் கர்தாஷியன் உடை

கருப்பினத்தவருக்கு ஆதரவு?- மெட் காலாவில் வைரலான கிம் கர்தாஷியன் உடை
Updated on
1 min read

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் வித்தியாசமான உடை அணிந்து கலந்து கொண்டனர்.

மெட் காலா நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும் ஃபேஷன் நிகழ்ச்சி ஆகும். அமெரிக்கா மட்டுமல்லாது உலகில் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த மாடல்கள், நடிகர், நடிகைகள், பாடகர்கள் எனப் பலரும் வண்ணமயமான, வித்தியாசமான ஆடைகளுடன் கலந்து கொள்வர். இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா, பிரியங்கா சோப்ரா, தீபிகா போன்றோரும் இந்த நிகழ்ச்சியில் கடந்த காலங்களில் கலந்து கொண்டனர்.

கரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்நிலையில் மெட் காலா நிகழ்ச்சி தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வித்தியாசமான ஆடை அணிந்த பிரபலங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

குறிப்பாக ரியாலிட்டி நிகழ்ச்சி பிரபலமான கிம் கர்தாஷியன் உடலை மறைக்கும் கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டார். கருப்பினத்தவருக்கு ஆதரவாக இந்த உடையில் கிம் கர்தாஷியன் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in