Published : 10 Sep 2021 05:57 AM
Last Updated : 10 Sep 2021 05:57 AM

காபூலில் நார்வே தூதரகத்தை கைப்பற்றிய தலிபான்கள்: குழந்தைகளின் புத்தகங்களை அழிக்க உத்தரவு

ஆப்கானிஸ்தான் தலைநகர்காபூலில் உள்ள நார்வே நாட்டின்தூதரகத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். முதல்கட்டமாக, அங்குள்ள ஒயின் பாட்டில்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் அழிக்க அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமையப் பெற்று பிரதமர்,துணைப் பிரதமர் மற்றும் அமைச்சர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். தலிபான்கள் பொதுவாக பழமைவாதத்தை பின்பற்றக்கூடியவர்கள். அதாவது, பழங்கால இஸ்லாம் மத விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதே அவர்களின் குறிக்கோள். அதன்படி, ஆப்கானிஸ்தான் முழுவதும் அதை செயல்படுத்த தொடங்கியுள்ளனர். பெண்கள், குழந்தைகள் கல்வி கற்கத்தடை, மது அருந்தத் தடை,பெண்கள் வேலைக்கு செல்லத்தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப் பாடுகளை அவர்கள் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், காபூலில் உள்ள நார்வே நாட்டின் தூதரகத்தை தலிபான்கள் நேற்று கைப்பற்றினர். அப்போது முதல்கட்டமாக, அங்குள்ள ஒயின் பாட்டில்கள் மற்றும் குழந்தைகளின் புத்தகங்கள் ஆகியவற்றை அழிக்க உத்தரவிட்டனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய போதே, நார்வே தூதரக அதிகாரிகள் தாயகம் திரும்பிவிட்டனர். தற்போது ஒரு சில அலுவலர்கள் மட்டுமே அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஈரான் நாட்டுக்கான நார்வே தூதர் சிஹ்வல்ட் ஹேக் கூறும்போது, “காபூலில் உள்ள நார்வே தூதரகம் தலிபான்களால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஒரு சிலதினங்களில் தூதரகத்தை ஒப்ப டைத்து விடுவதாக அவர்கள் தெரிவித்தனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x