Published : 07 Feb 2016 09:32 AM
Last Updated : 07 Feb 2016 09:32 AM

போர்க்குற்ற விசாரணை விவகாரம்: ஐ.நா. மனித உரிமை ஆணையர் இலங்கையில் 4 நாட்கள் பயணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணை யர் ஜெய்ட் ராட் அல் உசேன் 4 நாட்கள் பயணமாக நேற்று இலங்கை தலைநகர் கொழும்பு சென்றார்.

இந்தப் பயணத்தின்போது அதி பர் மைத்திரிபால சிறிசேனா, பிரத மர் ரணில் விக்ரமசிங்கே, வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார். இன்று அவர் யாழ்ப்பாணம் செல்கிறார். அங்கு வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், ஆளுநர் பலிஹக்காரா ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

பின்னர் அகதிகள் முகாமுக் குச் சென்று அவர்களின் நிலை மையை ஆய்வு செய்கிறார். திரி கோணமலைக்குச் செல்லும் ஜெய்ட் ராட் அல் உசேன் அங் குள்ள விமானப் படை முகாமை பார்வையிடுகிறார்.

பின்னர் கிழக்கு மாகாண முதல்வர் ஹாபிஸ் நசீர் அகமது, ஆளுநர் ஆஸ்டின் பெர்னாண்டோ ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். திரிகோணமலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்திக்கிறார். வரும் திங்கள்கிழமை கண்டிக்கு செல்லும் மனித உரிமை ஆணையர் ஜெய்ட், பவுத்த மதத் தலைவர்களை சந்தித்துப் பேசு கிறார். பின்னர் கொழும்பு திரும்பும் அவர் பாதுகாப்பு செயலாளர், முப்படைகளின் தளபதிகளை சந்திக்கிறார்.

வரும் 9-ம் தேதி கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரகத்தில் செய்தி யாளர்களுக்கு பேட்டியளிக்கிறார். அப்போது இலங்கை ராணுவ போர்க்குற்ற விசாரணை குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளி யிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கமிஷன் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி வருகிறது. ஆனால் உள்நாட்டு நீதிபதிகளால் மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனா கூறி வருகிறார். இந்தப் பின்னணியில் ஐ.நா. மனித உரிமை ஆணையரின் இலங்கை பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x