Published : 12 Feb 2016 02:05 PM
Last Updated : 12 Feb 2016 02:05 PM

ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் கண்டுபிடிப்பு: அறிவியலின் அதிசயிக்கத்தக்க அடுத்தகட்டம்

இரண்டு கருந்துளைகள் ஒன்றையொன்று சுற்றி பிணைந்தபோது அண்டவெளியில் ஏற்பட்ட ஈர்ப்பு கவர்ச்சி அலைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது வானியல் அறிவியலில் அதிசயிக்கத்தக்க அடுத்த கட்டமாக வர்ணிக்கப்படுகிறது.

விண்வெளியில் சூரியனைப் போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்கள் உள்ளன. அவை தங்களது வாழ்நாளின் இறுதியில் கருந்துளைகளாக (black-hole) மாறும். அவை ஒன்றையொன்று சுற்றும்போது அண்டவெளியில் (space-time) அதிர்வுகள் ஏற்பட்டு அவை ஈர்ப்பு கவர்ச்சி அலைகளாக வெளியாகும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்பே இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கணித்திருந்தார்.

அந்த கணிப்பு சரியானது என்பதை விஞ்ஞானிகள் இப்போது உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து லிகோ (LIGO – Advanced Laser Interferometer Gravitational-Wave Observatory) திட்ட செயல் இயக்குநர் டேவிட் ரிட்ஸ், வாஷிங்டனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

விண்வெளியில் ஏதோ ஒரு இடத்தில் சூரியனை போன்று 29 மற்றும் 36 மடங்குகள் பெரிய இரண்டு ராட்சத கருந்துளைகள் அல்லது விண்மீன்கள் ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டே மோதிப் பிணைந்துள்ளன. அந்த நிகழ்வால் ஏற்பட்ட ஈர்ப்பு கவர்ச்சி அலைகளை இப்போது கண்டுபிடித்துள்ளோம்.

அந்த இரண்டும் பிணைந்து சூரியனைவிட 62 மடங்குகள் பெரிதாக மாறிவிட்டது. இந்த நிகழ்வால் உருவான ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் பிரபஞ்சத்தின் கீச்சுக்குரல் போல வெளிப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x